yarlathirady.com

வாக்குச்சாவடியில் ஆள் அடையாளத்தை உறுதி செய்யும் 9 வகையான ஆவணங்கள்..!!

[2024-09-14 11:56:49] Views:[13]

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது வாக்காளர்கள் தங்களது ஆள் அடையாளத்தை உறுதி செய்வதற்காக பயன்படுத்தக்கூடிய ஒன்பது வகையான ஆவணங்கள் குறித்த தகவலை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், அரச சேவை ஓய்வு அடையாள அட்டை, பிரதேச செயலகத்தினால் வெளியிடப்படும் வயோதிபர் அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வெளியிடப்படும் மதகுருமாறுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தினால் வெளியிடப்படும் தேசிய அடையாள அட்டை தகவல்களை உறுதி செய்யும் கடிதம், தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் தற்காலிக அடையாள அட்டை மற்றும் விசேட தேவை உடையவர்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் தற்காலிக அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை வாக்குச்சாவடிகளில் பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட அடையாள அட்டைகள் எதுவும் இன்றி வாக்குச்சாவடிக்குச் செல்லும் வாக்காளர்களுக்கு வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்படாது என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தெளிவற்ற அடையாள அட்டைகள், அமைச்சரவை, திணைக்கள மற்றும் அரசாங்க நிறுவனங்களினால் வெளியிடப்படும் சேவை அடையாள அட்டை, தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பம் செய்து வழங்கப்படும் பற்றுச்சீட்டு போன்ற எந்த ஒரு ஆவணமும் வாக்குச்சாவடியில் ஏற்றுக் கொள்ளப்படாது என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கதது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.