வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.!
[2024-09-14 11:47:38] Views:[12]
இந்த வருடம் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களை பல கட்டங்களாக இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, பொது போக்குவரத்து சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை முதலில் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி முதல் வர்த்தக மற்றும் சரக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கார்களை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கத்தினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக 2021 ஆம் ஆண்டு வாகன இறக்குமதியை இடைநிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருந்தது என்பது குறிப்பிடதக்கது.










