யாழில் கோர விபத்து;
பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே பலி.!
[2024-09-14 11:29:42] Views:[12]
யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை பகுதியில் நேற்றைய தினம் (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த பு. கண்ணதாசன் (வயது - 32) எனும் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிர் திசையில் வந்த JCB வாகனத்தில் வீசி எறியப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










