வடக்கில் இரண்டு ஏற்றுமதி வலயங்கள் அங்குரார்ப்பணம்;
[2024-09-14 11:12:43] Views:[11]
வடக்கு மாகாணத்தில் ஸ்தாபிக்க திட்டமிடப்பட்டுள்ள மூன்று ஏற்றுமதி செயலாக்க வலயங்களில் இரண்டு வலயங்கள் நேற்றைய தினம் (13) வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக பெயரிடப்பட்டன.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மற்றும் கிளிநொச்சி பரந்தன் ஆகிய ஏற்றுமதி செயலாக்க வலயங்கள் இவ்வாறு பெயரிடப்பட்டன.
இந் நிகழ்வுகளில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், முதலீட்டு ஊகுவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம மற்றும் முதலீட்டு பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வின் போது இரண்டு ஏற்றுமதி செயலாக்க வலயங்களிலும் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.










