மலேசியா - தாய்லாந்து எல்லையில் கைதான இலங்கையர்.!
[2024-09-13 13:24:09] Views:[10]
மலேசியா - தாய்லாந்து எல்லைச் சோதனைச் சாவடியில் வைத்து, போலி மலேசியக் கடவுச்சீட்டை வைத்திருந்த இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மலேசிய பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கையை சேர்ந்த ராஜா டெனி டெனிஸ் என்ற பெயர் கொண்ட 21 வயதான இளைஞனே போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்தில் குறித்த இளைஞன் தடுத்து வைக்கப்பட்டதாக அதன் இயக்குனர் முகமட் ரிஸ்வான் முகமட் ஷைன் தெரிவித்துள்ளார்.
மலேசிய குடிமகனாக தம்மை ஆள்மாறாட்டம் செய்து தாய்லாந்திற்கு செல்ல முயன்றபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், செல்லுபடியாகும் பயண ஆவணம் இன்றி நாட்டிற்குள் நுழைந்து தங்கியிருந்தமைக்காக சந்தேகநபர் குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.










