ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியானது புதிய கருத்து கணிப்பு.!!
[2024-09-13 10:09:15] Views:[10]
இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் - 2024 தொடர்பிலான புதிய கருத்து கணிப்பொன்று வெளியாகியுள்ளது.
குறித்த புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் தற்போதய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் முன்னணி கருத்து கணிப்பு நிறுவனமான numbers.lk என்ற நிறுவனமே இந்தக் கருத்து கணிப்பை முன்னெடுத்துள்ளது.
குறித்த புதிய கருத்து கணிப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு 43.4 வீத ஆதரவு காணப்படுவதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேலும், 29 வீத ஆதரவுடன் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க இரண்டாம் இடத்தினை வகிப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு 26.2 வீத ஆதரவு காணப்படுவதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச பெற்றுக்கொள்ளக்கூடிய வாக்குகள் தொடர்பில் இந்த நிறுவனம் சரியான எதிர்வு கூறல்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










