அதிக விலைக்கு முட்டை விற்றவருக்கு 06 மாத கடூழிய சிறைத்தண்டனை.!
[2024-09-13 09:22:06] Views:[11]
அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முட்டை வியாபாரி ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குருநாகல், மாதவ பகுதியைச் சேர்ந்த முட்டை வியாபாரி ஒருவர் அதிக விலைக்கு முட்டையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த சந்தேகநபரை பிலெஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது அவருக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 06 மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.










