வவுனியா சிறைச்சாலையில் இருந்து 17 கைதிகள் விடுதலை
[2024-09-12 19:11:37] Views:[10]
நாடளாவிய ரீதியில் தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் 350 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.
இன்று (12) வவுனியா (Vavuniya) விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து17 கைதிகள் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்படுகின்றது.
கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










