இந்திய மீனவர்கள் 35 பேரின் விளக்கமறியல் நீடிப்பு...!
[2024-09-12 11:12:38] Views:[12]
கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கற்பிட்டி, குதிரமலைப் பகுதியில் இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 35 பேர் இலங்கை கடற்படையிரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தாக குற்றச்சாட்டப்பட்டு புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது அவர்களை நேற்று 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் குறித்த மீனவர்கள் நேற்று (11) மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை மேலதிக விசாரணைகளுக்காக தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










