yarlathirady.com

கொடூரமாக மகனை வெட்டிக் கொன்ற தந்தை.!

[2024-09-12 09:37:36] Views:[18]

கொழும்பு, இரத்மலானை பகுதியில் தந்தையொருவர் உறங்கிக் கொண்டிருந்த மகனை வெட்டிக் கொலை செய்ததுடன், மனைவியை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் கொழும்பு, இரத்மலானை, மாளிகாவ வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 26 வயதுடைய லஹிரு லக்ஷான் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

54 வயதுடைய கொலையாளியின் மனைவி பலத்த வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வேறு பகுதியில் வசித்து வந்த நிலையில் நேற்று வீட்டின் அருகாமையில் மறைந்திருந்து இரகசியமாக வீட்டுக்குள் நுழைந்து மகனையும் மனைவியையும் கொடூரமாக வெட்டிய பின்னர் தப்பியோடியுள்ளார்.

சத்தம் கேட்டு வந்த அயலவர்கள் பலத்த காயமடைந்த தாயையும் மகனையும் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர், எனினும் மகன் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான தந்தை பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.