ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு வட மாகாண ஆளுநரை சந்தித்தது;
[2024-09-10 12:33:16] Views:[11]
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் நேற்றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த சந்திப்பானது யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளூநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது.
இதன்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வடக்கு மாகாணத்தின் கள நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைதியான முறையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஆளுநர், மக்கள் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினரிடம் தெளிவுப்படுத்தினார்.
மேலும், சுதந்திரமானதும், நீதியானதுமான தேர்தல் நடைபெறவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என இதன்போது ஆளுநர் குறித்த ழுவினரிடம் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.










