யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட சடலம்.!
[2024-09-10 11:54:53] Views:[10]
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் அடிகாயங்களுடன் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அல்லைப்பிட்டி 03ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 43) என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் புதிதாக கட்டப்படும் கட்டடம் ஒன்றின் அருகில் இருது சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், சடலத்தில் அடிகாயங்கள் காணப்பட்ட நிலையில், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவரும் நிலையில், யாழ்ப்பாண தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்று தடயவியல் விசாரணைகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.










