அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீப்பிடித்த கெப் ரக வாகனம்.!
[2024-09-10 11:23:39] Views:[15]
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பொறியியலாளர்கள் இருவர் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று கொட்டாவ பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் வண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக கொட்டாவ பரிமாற்ற கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கொட்டாவ சந்திப்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணிப்பதற்கான வாகனங்களின் நுழைவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீ விபத்தில் இரண்டு பொறியாளர்களுக்கோ அல்லது சாரதிக்கோ காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பொறியியலாளர்கள் வேலை நிமித்தம் காலி பிரதேசத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு தீயை அணைத்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.










