yarlathirady.com

வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி சடலமாக மீட்பு..!

[2024-09-10 10:27:31] Views:[10]

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த சட்டத்தரணி ஒருவர் நேற்று முன்தினம் மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பலாலி வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கனகசபாபதி றமநாதன் (86 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் பொலிஸாருக்கு பிரதேச வாசிகள் வழங்கிய தகவலையடுத்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு பிள்ளைகள் இல்லை என்பதுடன் மனைவியும் உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இவர் உணவினை வெளியில் இருந்து தினமும் பெற்று உண்பது வழக்கம் என்ற நிலையில், இவருக்கு வழமையாக உணவு வழங்கும் பெண் நேற்று முன்தினம் அவரது வீட்டிற்கு வந்து பார்த்த பொழுது அவரது நடமாட்டம் இருக்கவில்லை என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, அயல் வீட்டாரின் உதவியுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார், பின்னர் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது,

சடலம் மீதான மரணம் விசாரணைகளை திடீர் மரணம் விசாரணை அதிகாரி நமசிவாய பிறேம்குமார் மேற்கொண்டதுடன், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்து சாலையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.