இன்று முதல் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்: கல்வி அமைச்சு அறிவிப்பு.!
[2024-09-09 11:17:34] Views:[10]
வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் 7000 மாணவர்களுக்கு கல்விக்கடனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை இன்று முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு 05 பிரிவுகளின் கீழ் அதிகபட்சமாக 15 லட்சம் ரூபா வரை கடன் பெறலாம் என்றும், பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.










