இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி குறைக்கப்படவுள்ளது...!!!
[2024-09-08 21:17:17] Views:[10]
நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சீமெந்து மீதான வரியைக் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளது.
அதன்படி இறக்குமதி செய்யப்படும் சீமெந்து 1KG கிராமிற்கு 01/= ரூபாவினால் வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
50KG மற்றும் அதற்கும் குறைவான பொதிகளில் இறக்குமதி செய்யப்படும் சீமெந்துக்கான வரி 8/= ரூபாவில் இருந்து 7/= ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை 1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிற்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த வரி திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










