யாழில் மர்ம நபர்களால் வாகனங்களுக்கு தீ வைப்பு: தொடரும் விசாரணைகள்...!!
[2024-09-08 21:01:30] Views:[9]
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலொன்றினால் நேற்றய தினம் வான் மற்றும் கார் என்பவற்றிற்கு தீ வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ் கோப்பாய் பகுதியில் வீடொன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் மற்றும் கார் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ஏற்பட்ட தீயினை அணைக்க முற்பட்டபோது, வாகன உரிமையாளரின் தாய் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும்
பின் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.










