இன்றைய வானிலை
[2024-09-08 09:03:30] Views:[9]
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (08) வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமெனவும் வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 KM வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.










