சட்டவிரோத மணல் அகழ்வு
[2024-09-07 09:20:20] Views:[10]
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மணல் இரவு வேளைகளில் வெளி எடுத்துச் செல்லப்பட்டு வருவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைவாக தர்மபுரம் பொலிஸார் சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 15 க்யூப்க்கும் அதிகமான மணலினை கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










