கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை
[2024-09-07 08:54:12] Views:[9]
நேற்றையதினம் (06) அதிகாலை புத்தளம் - கோம்பகஹவெவ கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானை வீடு ஒன்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், வீட்டிலிருந்த எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளதாகவும் பாரிய சத்தத்துடன் வீட்டு வளவுக்குள் நுழைந்த காட்டு யானை, வீட்டை உடைத்து , வீட்டில் இருந்த நெல் மூடைகளை வெளியே எடுத்ததாகவும் கூறப்படுகிறது.










