மசாஜ் நிலையம் முற்றுகை.; எட்டு பெண்கள் கைது.!
[2024-09-06 10:36:28] Views:[10]
கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது, ஓரு விடுதியிலிருந்து 05 பெண்களும் மற்றைய விடுதியிலிருந்து 03 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
24 முதல் 45 வயதுக்குட்பட்ட அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










