தமிழர் பகுதியில் கண்ணிவெடி விபத்து.! நால்வர் படுகாயம்..!
[2024-09-06 09:50:25] Views:[9]
முல்லைத்தீவு பகுதியில் இடம்பெற்ற கண்ணிவெடி விபத்தில் நான்கு கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று (05) மதியம் மாங்குளம், துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே இவ்வாறு கண்ணிவெடி விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.










