உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு - வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும்
[2024-09-05 19:05:22] Views:[10]
பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 15 நாட்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன்
2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் இந்த பல்கலைக்கழகங்களுக்கான தெரிவு வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெட்டுப்புள்ளிகளை தற்போது வெளியிடும் நடவடிக்கைகள் இறுதிகட்ட பணியில் உள்ளதாக அதன் உபதலைவர் தெரிவித்துள்ள வேளை, கடந்த 2023(2024) ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் மீளாய்வு பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை www.results.exams.gov.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரிகளின் விபரங்களை திருத்த வேண்டி ஏற்பட்டால் இம்மாதம் ஒன்பதாம் திகதி வரை இணையத்தளம் மூலம் திருத்த வசதியளிக்கப்படும் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










