இரு உயிர்களை காவுகொண்ட கோர விபத்து..!
[2024-09-05 11:54:59] Views:[11]
கெக்கிராவ, எப்பாவல பகுதியில் பொலிஸ் சார்ஜன்ட் ஓட்டிச் சென்ற வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் சைக்கிளில் பயணித்த தாயும் மகளும் உயிரிழந்துள்ளதுடன், 3 வயதுடைய குழந்தை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்.
நேற்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த விபத்தில் 3 வயதுடைய குழந்தை ஒன்று படுகாயமடைந்த நிலையில் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 மற்றும் 38 வயதுடைய இரு பெண்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேனின் சாரதி தூங்கியதால் வேன் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் குறித்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், அவர் அனுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் என தெரிவிக்கப்படுகிறது.










