உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவித்தல் ;
[2024-09-04 13:17:11] Views:[15]
உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் போல் தம்மைக் காட்டிக்கொண்டு வரிப்பணம் வசூலிக்கும் நபர்களால் நிதி மோசடி செய்யப்படுவதாக இலங்கையின் உள்நாட்டு இறைவரி திணைக்களம் (IRD) பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சில நபர்கள் தம்மை அதிகாரிகளாகக் காட்டிக் கொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொய்யாக வரிப் பணத்தை வசூலித்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற போலி ஐஆர்டி அதிகாரிகளை சந்தித்து அவர்களிடம் பணம் செலுத்தியிருந்தால் அல்லது தமது பிரதேசத்தில் இவ்வாறான செயல்கள் நடைபெறுவதாக அறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடுமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள் என குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.










