yarlathirady.com

அனுரவால் திருடர்களை சிறையிட முடியும் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது..! விக்கி சுட்டிக்காட்டு;

[2024-09-04 12:29:44] Views:[11]

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் திருடியவர்களை பிடித்து சிறையில் அடைக்களாம் ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாட்டை திருடியவர்கள் மற்றும் சூறையாடியவர்களை பிடித்து சிறையில் அடைப்பார் என்பது உண்மையான விடயம்.

ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கி கொண்டு செல்வதற்கான திட்டங்களோ அல்லது சர்வதேச ஒத்துழைப்பையோ அவரால் பெற முடியாது.

நாட்டின் பொருளாதாரரீதியாக கட்டி எழுப்ப அவர்கள் சீனாவின் உதவியை நாட வேண்டிய தேவை ஏற்பாடும். ஏற்கனவே நாடு சீனாவின் கடன் பொறிக்குகள் சிக்கியுள்ளமையினால் நாட்டு மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

மேலும் தேசிய மக்கள் சக்தியினர் சீனாவின் கொள்கைகளுடன் ஒத்து போகும் நிலையில் அவர்கள் ஆட்சி வருவார்களானால் இலங்கை தீவின் பிராந்திய அமைதிக்கு பங்கம் ஏற்படும்.

தேசிய மக்கள் சக்தியின் ஆரம்ப கால நடவடிக்கைகள் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பதனால் அநுரவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என கருதுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.