பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி கோர விபத்து
[2024-09-02 14:59:40] Views:[11]
ஞாயிற்றுக்கிழமை (01) மாலை மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் பேருந்து ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியு வருகிறது.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்தவர் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டி நொருங்கியுள்ளதுடன் பேரூந்தின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.










