சட்டவிரோத பொருளுடன் டுபாயிலிருந்து வந்தவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது..!
[2024-09-01 10:44:12] Views:[11]
உரிய வரி செலுத்தாமல் டுபாயில் இருந்து சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினரால் சந்தேகநபர் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 20,000 சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் பிரிவு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.










