yarlathirady.com

இராணுவ தளபதியினால் யாழில் குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்கு புதிய வீடு..!

[2024-08-31 13:29:55] Views:[9]

இலங்கை இராணுவம் யாழ். குடாநாட்டில் போரினால் பாதிக்கப்பட்ட குறைந்த வருமானம் பெறும் பொதுமக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் 2024.08.24 திகதி யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்கள் யாழ்ப்பாணம், ஈவினை பகுதியைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் சுகன்யா என்பவரது குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்றினை கையளித்தார்.

குறித்த வீட்டினை திரு. சுமி சின்னய்யா குடும்பத்தினர் மற்றும் Wanni Aid Canada என்ற நிறுவனத்தின் நிதி உதவில், 15 வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியினர் தங்களது மனிதவளம் மூலம் நிர்மாணித்திருந்தனர்.

இந் நிகழ்வில் யாழ். பாதுகாப்பு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க, 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜயவர்தன, 553 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் மென்டிஸ், இராணுவ அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.