வவுனியாவில் விபத்து
[2024-08-29 11:16:55] Views:[9]
நேற்றையதினம் (28) மாலை வவுனியா நகர பகுதியில் விபத்துக்களை ஏற்ப்படுத்திய கார் சாரதியை இளைஞர்கள் விரட்டிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கூமாங்குளம் பகுதியிலிருந்து காரை செலுத்தி வந்த இளைஞர் ஒருவர் உக்கிளாங்குளம் பகுதியில் விபத்து ஒன்றை ஏற்ப்படுத்திவிட்டு நிறுத்தாமல் தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன்போது வைரவபுளியங்குளம், மற்றும் நகரப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த ஏனைய வாகனங்களுடனும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனையடுத்து குறித்த காரை இளைஞர்கள் சிலர் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்த இளைஞர்கள், அவரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் வெளியாகியுள்ளது.










