ஆயுதப்படையினரை அழைப்பதற்கான வர்த்தமானி வெளியீடு...
[2024-08-28 12:06:54] Views:[9]
நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்கள் அனைவரையும் அழைப்பதற்கான உத்தரவு அடங்கிய வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி நேற்று (27) வெளியிட்டுள்ளார்.
நிர்வாக மாவட்டங்கள் மற்றும் தொடர்புடைய உள்ளூர் நீர்நிலைகளில் பொது ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு ஆயுதப்படைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










