முன்னாள் அமைச்சர் பௌசிக்கு 2 வருட கடூழிய சிறை தண்டனை.!
[2024-08-28 10:51:13] Views:[10]
நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருடங்களுக்கான கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
ஏ.எச்.எம். பௌசி 2010ம் ஆண்டு அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக இருந்த காலப்பகுதியில், வெளிநாடொன்றினால் அமைச்சு அலுவல்களுக்காக வழங்கப்பட்ட வாகனத்தை அவா் தனது தனிப்பட்ட வகையில் பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதனையடுத்து, நேற்றையதினம் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க இந்த தீர்ப்பை அறிவித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கில் அவருக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










