தீயில் எரிந்த இளம் குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி மரணம்..!
[2024-08-28 06:08:57] Views:[13]
தீயில் எரிந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 28 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் நேற்றையதினம் (27) சிகிச்சை பலனின்றி உயிரழந்துள்ளார்.
கடந்த 25ஆம் திகதி தீயில் எரிந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நிருத்திகா என்ற குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டதுடன், சடலத்தை புதைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு அவரது கணவனே தீ வைத்ததாக உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ள போதும் கணவன் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










