யாழில் நாய் கடிக்கு இலக்கான குடும்பப் பெண் உயிரிழப்பு
[2024-08-27 09:12:30] Views:[9]
நேற்று காரைக்காட்டு வீதி - வண்ணார் பண்ணை பகுதியில் வளர்ப்பு நாய் கடித்ததால் சிகிச்சை பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகிறது.
இவருக்கு கடந்த மாதம் 24 ஆம் திகதி வளர்ப்பு நாய் கையில் கடித்த
நிலையில் அவர் இந்த மாதம் 13ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு, சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு பக்றீரியா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தோல் வியாதி ஏற்பட்டு நேற்று அதிகாலை காலை உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.










