யாழ் இளைஞனை வெளிநாடு அனுப்புவதாக கூறி 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண் கைது!
[2024-08-26 13:06:10] Views:[17]
வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி இளைஞனிடம் சுமார் 15 இலட்ச ரூபாய் மோசடி செய்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்பில் வசித்து வரும் பெண்ணொருவரே இவ்வாறு யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனிடம் வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 15 இலட்ச ரூபாய் வரையில் பெற்று மோசடி செய்துள்ளார்.
அது தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனால், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில்,
மோசடியில் ஈடுபட்ட பெண் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பெண் தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணிடம் விசாரணைகளை முன்னெடுத்துவரும் பொலிஸார், விசாரணைகளின் பின் அவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.










