அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்..!!
[2024-08-23 10:42:54] Views:[9]
ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 2025 ஜனவரி முதல் ரூ.12,500/= வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறித்த தகவலை சம்பள முரண்பாடுகள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழுவின் தலைவர் உதய ஆர். செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிதி சாத்தியத்தின் அடிப்படையில் படிப்படியாக பொருத்தமாக பலன்களை வழங்க 2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், ஒக்டோபர் மாதம் முதல் 3000/ ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.










