10 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு....!!
[2024-08-23 09:22:48] Views:[9]
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் 10 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
டின் மீன் ஒன்று 75/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 500/= ஆக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 5/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 780/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ பாசிப்பயறு 25/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 890/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ வெங்காயம் 20/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 470/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ நெத்தலி 15/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 925/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ கடலை 2/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 439/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ சம்பா அரிசி 4/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 226/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது.
ஒரு கிலோ வெள்ளை சீனி 5/= ரூபாவினால் குறைக்கப்பட்டு 242/= ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றதாக அறிவிக்கப்படுட்டுள்ளது.










