இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர்: மக்களே அவதானம்...!!!
[2024-08-21 11:40:10] Views:[9]
இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர் அடையாளங்காணப்பட்டுள்ள நிலையில், உலக நாடுகளைப் போன்று இலங்கையிலும் பரவலடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே, நோய் அறிகுறிகளின் அடிப்படையில் விரைந்து மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வலியுறுத்தியுள்ளது.
அண்மைக்காலமாக வெகுவிரைவாக பரவலடைந்துவரும் இந்த தொற்றுநோய் நிலைமை தற்போது வரையில் 109 வரையான நாடுகளுக்கு ஊடுருவியுள்ளது.
பொதுவான காய்ச்சல் ஏற்பட்டு 13 நாட்களாகும்போது கொப்புலங்கள் தென்பட ஆரம்பமாகும் என்பதுடன் பிரதானமாக முகம் மற்றும் கைகள், உடல் அடிப்பாகங்களில் இதனை அவதானிக்கக் கூடியதாக இருக்கும்.
இந்த நோயை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு இரத்தப் பரிசோதனை மற்றும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
கொவிட் 19 தொற்றுக்காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட அனுபவங்களின் அடிப்படையில், இதுபோன்ற சுகாதாரப் பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்வதற்காக அறிவியல் ரீதியாக செயற்படுவது மிகவும் அவசியமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளது.










