yarlathirady.com

யாழ் விடுதியொன்றில் வைத்து மூன்று யுவதிகள் கைது..!

[2024-08-20 11:47:59] Views:[10]

யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான முறையில் தங்கியிருந்த மூன்று யுவதிகள் நேற்று (19) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , மாவட்ட செயலகத்திற்கு சற்று தொலைவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் வைத்து குறித்த யுவதிகள் கைதானதாக கூறப்படுகின்றது.

குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆள் நடமாட்டம் உள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த விடுதிக்கு பொலிஸார் சென்று சோதனையிட்டனர்.

அதன்போது, விடுதியில் எவ்வித பதிவுகளும் இன்றி தங்கியிருந்ததுடன், தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய மூன்று யுவதிகளை பொலிஸார் கைது செய்தனர்.

கைதான யுவதிகள் யாழ். நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை , அவர்களை எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் கைதான யுவதிகள் மூவரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளார்.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.