மட்டுப்படுத்தப்பட்ட நாகப்பட்டினம்-காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை....!
[2024-08-20 11:32:13] Views:[12]
போதிய முன்பதிவு இல்லாததால் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறைக்கு பயணிகள் படகு சேவை வாரத்தில் 3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுளதாக சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவன இயக்குனர் நிரஞ்சன் தெரிவித்தார்.
இந்த நடைமுறை எதிர்வரும் 31ஆம் திகதி வரை கடைப்பிடிக்கப்படும் எனவும், பயணிகளின் வருகை அதிகரிப்பின் அடிப்படையில்,
செப்டெம்பர் முதலாம் திகதி முதல் தினசரி கப்பல் சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் நாகப்பட்டினம், காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை கப்பல் போக்குவரத்து நிறுவன இயக்குநர் நிரஞ்சன் அறிவித்துள்ளார்.










