செல்வச்சந்நிதியான் வருடாந்த மஹோற்சவ தேர் உற்சவம்..!!
[2024-08-19 11:22:21] Views:[12]
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் மண்ணின் வடமராட்சி, தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்தத் திருவிழாவின் இரத உற்சவம் நேற்று ஞாயிற்றுகிழமை காலை இடம்பெற்றது.
இந்நிலையில் வருடாந்த திருவிழாவில் நேற்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரேறி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்திருந்தார். முருகப்பெருமானின் ரதோற்சவம் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.










