55000 ரூபாயாக உயர உள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம்: ஜனாதிபதி உறுதி...!!
[2024-08-18 09:29:30] Views:[14]
நாட்டிலுள்ள அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளத்தை அடுத்த வருடம் 55,000 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அனுராதபுரம் சல்காது மைதானத்தில் நேற்று (17) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் எதிர்காலம் கருதியே அனைத்து கட்சிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










