வடக்கு கிழக்கில் இடியுடன் கூடிய கனமழை; யாழ். பல்கலை விரிவுரையாளர் விடுத்துள்ள எச்சரிக்கை...!!!
[2024-08-06 09:36:13] Views:[9]
வெப்ப மற்றும் காற்று வேக மாறுபாடு காரணமாக எதிர்வரும் 14.08.2024 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா அறிவித்துள்ளார்.
ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மற்றும் திருகோணமலை மாவட்டங்கள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நெல் மற்றும் சிறுதானிய பயிர்களை அறுவடை செய்பவர்கள் மழை தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம்.
மேலும் இடி மின்னல் தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம் என அவர் எச்சரித்துள்ளார்.










