இலங்கை கடற்பரப்பில் 04 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது..!
[2024-08-05 11:28:50] Views:[9]
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் அவர்களது படகொன்றும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் காரைநகரை அண்மித்த பகுதியில் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 04 இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த கடற்றொழிலாளர்கள், கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.










