வரலாற்று சிறப்பு மிக்க சந்நிதி முருகன் ஆலயதிருவிழா நாளை ஆரம்பம்...!!!
[2024-08-03 20:59:12] Views:[9]
வரலாற்று சிறப்புமிக்க வடமராட்சி தொண்டைமனாறு செல்வச் சந்நிதியான் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஆரம்பமாகவுள்ளது.
நாளை ஞாயிற்றுக் கிழமை மாலை 06.15 மணிக்கு கொடியேற்றத்துடன் மஹோற்சவம் ஆரம்பமாகி எதிர்வரும் 14 ஆம் திகதி புதன்கிழமை தீர்த்தத்திருவிழா நடைபெறும். அன்று மாலை 6.30 மணிக்கு மௌனத் திருவிழாவுடன் வருடாந்த மஹோற்சவம் நிறைவு பெறும் மறுநாள் 20 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாலை 6.30 மணியளவில் தொண்டர் பூசை நடைபெறும்.
மகோற்சவ தினங்களில் சந்நிதி சுற்றாடலில் அமைந்துள்ள அன்னதான மடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பட தக்கது.










