யாழில் ஆடி அமாவாசை விரத கருப்பு மண் சட்டிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது..!
[2024-08-03 20:43:25] Views:[11]
ஆடி அமாவாசை விரதமானது தந்தையை இழந்தவர்களால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அமாவாசை விரதற்கு உணவுகளை சமைப்பதற்கான கறுப்பு மண்சட்டிகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
யாழ். திருநெல்வேலி பொதுசந்தைக்கு அருகாமையில் கறுப்பு மண்சட்டிகள் இவ்வாறு விற்பனையாகி வருகின்றது.
ஒரு பெரிய கறுப்பு மண் சட்டியின் விலை 250/= ரூபாவில் இருந்து 300/= ரூபா விற்பனையாகி வருகின்றது. ஒரு சிறிய கறுப்புச்சட்டியின் விலை 80 /= ரூபாவில் இருந்து 100/= ரூபா வரை விற்பனையாகி வருகின்றது.
இந்நிலையில், திருநெல்வேலி பொதுச்சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மரக்கறிகளையும், கறுப்புச்சட்டியினை கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிந்தது.










