சென்னை-யாழ்ப்பாண விமான சேவையை ஆரம்பிக்கும் இண்டிகோ விமான நிறுவனம்..!!
[2024-08-03 10:45:47] Views:[14]
சர்வதேச விமான இணைப்பை மேம்படுத்தும் வகையில் இண்டிகோ விமான நிறுவனம் யாழ்ப்பாணத்திற்கு புதிய விமான சேவையை அறிமுகப்படுத்தவுள்ளது.
செப்டம்பர் முதலாம் திகதி முதல் சென்னை மற்றும் யாழ்ப்பாணம் இடையே நாளாந்த புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் ஆரம்பிக்கவுள்ளது.
இண்டிகோ நிறுவனம் இலங்கையில் கொழும்புக்கு மட்டுமே இதுவரை விமான சேவை இருந்த நிலையில் யாழ்ப்பாணத்துக்கு சேவை ஆரம்பம் செய்யப்பட உள்ளது.
இம்மாதம் முதலாம் திகதி முதல் விமானத்திற்கான முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










