மட்டக்களப்பில் இடம்பெற்ற உலகத் தமிழ் இலக்கிய மாநாடு....!!
[2024-08-02 21:21:43] Views:[12]
உலகத் தமிழ் இலக்கிய மாநாடு மட்டக்களப்பில் மிகவும் கோலாகலமான முறையில் ஆரம்பமாகியுள்ளது. குறித்த நிகழ்வு இன்று கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகரில் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தின் முன்னாக அமைந்துள்ள சந்தியில் புதிதாக அமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையும் இதன்போது திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உலகத் தமிழ் கலை இலக்கிய கருத்தரங்கத் தலைவர் முனைவர் க.சுபஷினி, மலேசியா நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணன், உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் கல்லாறு சதீஸ், கிழக்குப் பல்கலைக் கழக துணைவேந்தர் வ.கனகசிங்கம், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் குலேந்திரகுமார், மற்றும் கிழக்கு மாகாண உயர் அதிகாரிகள், என ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










