yarlathirady.com

இன்று முதல் பாடசாலை மாணவர்களுக்கு இலவச காப்புறுதி..!

[2024-08-01 21:22:43] Views:[15]

அனைத்து அரச, தனியார், மற்றும் விசேட பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இன்று முதல் மூன்று வருட காலத்திற்கு மாணவர் காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வி அமைச்சுக்கும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் காப்புறுதியை நடைமுறைப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர், கல்வி அமைச்சு இதற்காக 7,112 மில்லியன் ரூபாவை முதலீடு செய்துள்ளதாகவும், இந்த காப்புறுதி மூலம் அரச அல்லது தனியார் வைத்தியசாலைகளில் உள்நோயாளிகளுக்கான சிகிச்சைக்கான நன்மை ரூ. 300,000/- மற்றும் வெளிநோயாளர் சிகிச்சைக்கு ரூ. 20,000/- மற்றும் தீவிர நோய் நன்மையாக ரூ. 1,500,000/- வரை மாணவர்கள் பலனடைய முடியும் என தெரிவித்தார்.

ஆயுள் காப்புறுதியின் கீழ் வருடாந்த வருமானம் ரூ.180,000/- க்கும் குறைவான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மேலதிகமாக, 'அவஸ்வசும' திட்டத்தைச் சேர்ந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 75,000/= மற்றும் ஒரு மரணத்திற்கு ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகையான 225,000/= தொகையானது குடும்பத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமமாகப் பிரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்வி அமைச்சின் சார்பாக அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதுடன், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரியந்த பெரேராவும் இதில் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாசெய்திகள்
வெளிவந்த விஜய்யின் ஜனநாயகன் படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான விவரம்...!
2026-04-29 17:16:58
பல வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் விஜய் தனது கடைசிப்படமாக ஜனநாயகன் என்ற படத்தில் நடித்துள்ளார்
'திரிஷ்யம்-3' திரைப்படத்தின் அதிரடி அறிவிப்பு..!
2026-04-26 21:19:32
மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெற்றிப் படங்களிலொன்றான திரிஷ்யம், கடந்த 2013ஆம் ஆண்டு மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் வெளியாகி திரையுலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வெறும் ரூ.5 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம், ரூ.75 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன் வெற்றியால், இப்படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் கமல்ஹாசன் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்தியத் திரையிசையின் புகழ்பெற்ற பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்.
2026-04-13 11:08:02
பாடகி ஆஷா போஸ்லே மும்பையில் வசித்து வந்தார்
வெளியீடுக்கு முன்பே இணையத்தில் கசிந்த ஜனநாயகன் படம்...!
2026-04-10 22:27:32
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடக்கத்திலிருந்தே பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி வெளியீடு செய்ய திட்டமிடப்பட்டிருந்த இப்படம், தணிக்கை சான்றிதழ் பிரச்சனைகளால் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசைய முறுக்கு - 2
2026-04-08 16:12:01
இசை உலகிலும், தமிழ் சினிமாவிலும் தனித்துவமான இடத்தை பிடித்துள்ள ஹிப்ஹாப் தமிழா ஆதி, தற்போது தனது புதிய படமான மீசைய முறுக்கு 2 மூலம் ரசிகர்களை மீண்டும் கவரத் தயாராகி வருகிறார்.