யாழ்.மருதடி விநாயகர் ஆலயத்தை தரிசிக்க வந்துள்ள நடிகை ரம்பா குடும்பம்...!!
[2024-08-01 21:09:09] Views:[14]
யாழ்ப்பாணத்திற்கு தென்னிந்திய பிரபல நடிகை ரம்பா இந்திரகுமார் மீண்டும் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார்.
இவர்கள் இன்று (01) காலை வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மருதடி விநாயகர் தேவஸ்தானத்திற்கு வருகைதந்ததுடன் சிறப்பு பூஜை வழிபாட்டிலும் கலந்து கொண்டனர்.
யாழ். மருதடி விநாயகர் தேவஸ்தான அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், சிறார்களுடன் சிநேகிதபூர்வமான சந்திப்பிலும் கலந்து கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு குழுப்புகைப்படங்களை எடுத்துகொண்டனர்.










